இளங்கலை மருத்துவ படிப்புக்காக 23 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து காத்திருக்கும் 2025ம் ஆண்டுக்கான NEET தேர்வு மே 04, 2025 அன்று நடைபெறுகிறது. இந்த ஆண்டு முதல் இயற்பியல் & வேதியியல் பிரிவுகளில் தலா 45, உயிரியலில் 90 என 180 கேள்விகளுக்கு கட்டாயம் பதில் அளிக்க வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற பொதுப்பிரிவினருக்கு 50%, SC/ST & OBC பிரிவினருக்கு 40%, EWS & மாற்றுத்திறனாளிகளுக்கு 45% கட்-ஆப் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.