கோலிவுட்டில் அடுத்தடுத்து நடிகர்கள் மரணம்

50பார்த்தது
கோலிவுட்டில் அடுத்தடுத்து நடிகர்கள் மரணம்
தமிழ் நடிகர்கள் ரவிக்குமார், ஸ்ரீதர் ஆகியோரின் அடுத்தடுத்த மரணம் கோலிவுட் வட்டாரத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று முன்தினம் (ஏப்ரல் 4) 'அவர்கள்' ரவிக்குமார்(71) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த சோகம் மறைவதற்குள் நேற்று (ஏப்ரல்.5) மாலை 'சஹானா' ஸ்ரீதர் (62) மாரடைப்பால் காலமானார். கடந்த மாதம் 25ஆம் தேதி மனோஜ் பாரதிராஜா(48) மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி