ஹோட்டல் உணவுகளில் பூச்சிகள், பல்லி கிடக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை வில்லிவாக்கம் பகுதியில் செயல்படும் கணபதி பவன் உணவகத்தில் பெண்ணொருவர் நேற்று (அக். 4) போண்டா உணவை பார்சல் வாங்கிச் சென்றார். அதில் பிளேடு துண்டு கிடந்ததாக அவர் உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகாரளித்தார். அதன்பேரில் விளக்கம் கேட்டு உணவகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.