புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் காவல் சரகம் குளமங்கலம் தெற்கு கிராமத்தில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத குளக்கரை அருகே சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்த பகுதியில் ஒரு மனித எலும்புகள் சிதறிக் கிடப்பதாக கீரமங்கலம் போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எலும்புக்கூடை கைப்பற்றினர். மேலும், அதன் அருகில் கிடைத்த வேஷ்டி, துண்டை வைத்து காணாமல் என்பது விசாரித்து வருகின்றனர்.