கலிபோர்னியாவில் ஏற்பட்ட தீயை அணைக்க விமானங்கள் மூலம் நீர் தெளிக்கப்படுகிறது. மேலும் இதனுடன் சேர்த்து சிவப்பு நிற வண்ணப் பொடியும் தூவப்படுகிறது. இது எதற்காக என்று பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது. வண்ண நிறத்தை கொட்டுவது இனி எங்கெல்லாம் நீர் தெளிக்க வேண்டும், எங்கெல்லாம் நீர் தெளிக்கப்பட்டுள்ளது என்பதை அடையாளம் காண்பதற்காக கொட்டப்படுகிறது. ஆனால் இந்த கெமிக்கல் நிறப் பொடிகளால் பலருக்கு மேலும் சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது.