முளைத்த உருளைக்கிழங்கில் சோலனைன், சாகோனைன் ஆகிய கிளைகோ அல்கலாய்டுகள் உள்ளன. இவற்றை அதிகமாக உட்கொள்ளும் போது அது ஃபுட் பாய்சனை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். உருளைக்கிழங்கு முளைக்கட்டத் துவங்கும் பொழுது அதில் கிளைக்கோ அல்கலாய்டு அளவு அதிகமாகும். உண்ட சில மணி நேரங்களிலேயே இது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். காய்ச்சல், குழப்பம், குறைவான இரத்த அழுத்தம், வேகமான இதயத்துடிப்பு, தலைவலி, அரிதான நேரங்களில் பக்கவாதம் மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தும்.