செல்போன் வெடித்து விபத்து, உயிரிழப்பு என்ற செய்தியை கேட்டிருப்போம். ஆனால், பெர்ஃப்யூம் (சென்ட்) பாட்டில் வெடித்தது குறித்து கேள்விப்பட்டதுண்டா?. மும்பையில் பெர்ஃப்யூம் பாட்டில் வெடித்து கணவன், மனைவி, 2 குழந்தைகள் என 4 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். பெர்ஃப்யூம் பாட்டிலின் EXPIRY DATE-ஐ தீப்பற்றும் பொருட்களை கொண்டு மாற்றிய போது இச்சம்பவம் நேரிட்டதாக தெரிகிறது. பொதுவாகவே, பெர்ஃப்யூம்கள் எளிதில் தீப்பற்றக்கூடியது என்பதால் அதை பயன்படுத்தும் போது கவனம் தேவை.