பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஓரிரு தினங்களே இருப்பதால் பானைகள் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மதுரை கிடாரிப்பட்டி கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், ஒவ்வொரு வீட்டிலும் களிமண் பானைகள் செய்யப்படுகிறது. இதை நன்கு காய வைத்து, செம்மண் பூசி, வர்ணம் தீட்டி முடித்துள்ளனர். தற்போது மற்ற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.