தைப்பூசத்தை முன்னிட்டு கோவை-பழனி-திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5-14 வரை (ஞாயிறு தவிர) 10 நாட்களுக்கு இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. கோவையில் காலை 9:35 புறப்பட்டு, பழனிக்கு 12:05, திண்டுக்கல்லுக்கு 01:10-க்கு வருகிறது. திண்டுக்கல்லில் பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு பழனிக்கு 2:55, கோவைக்கு 5:50க்கு சென்றடைகிறது. இந்த ரயில் போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும்.