பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லம் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. தேனி மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியில் தயாரிக்கப்படும் வெல்லத்திற்கு அதிக தேவை ஏற்பட்டுள்ளதால், வெல்ல தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளது. இங்கு நாளொன்றுக்கு 50-ல் இருந்து 100 டன் வரை வெல்லம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்ட வெல்லம், தற்போது 60 வரை விற்கப்படுகிறது.