பொங்கல் பண்டிகையை ஒட்டி 44,580 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக ஜன.10 முதல் 13 வரை 21,904 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தொடர்ந்து, பொங்கல் பண்டிகை முடிந்து திரும்புவோர் வசதிக்காக ஜன.15 முதல் 19ஆம் தேதி வரை 22,676 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.