மணல் திருட்டில் ஈடுபட்டதாக இரண்டு பேர் கைது

68பார்த்தது
சிவகங்கை மாவட்டம் சாலைக் கிராமம் அருகே உள்ள வடக்கு சமுத்திரம் பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக வடக்கு சமுத்திரம் குரூப் கிராம நிர்வாக அலுவலர் கணேஷ் பிச்சை சாலை கிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியின் அடிப்படையில் சாலை கிராமம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் லோகநாதன் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டார். அந்த சோதனையில் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த செந்தில்நாதன் வயது 35 மற்றும் விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் பகுதியைச் சேர்ந்த துரைசிங்கம் வயது 29 ஆகிய இருவரும் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவரிடம் இருந்த ஹிட்டாச்சி வாகனத்தை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி