நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை நடைபெறும் என யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இனி ஆண்டிற்கு இருமுறை மாணவர் சேர்க்கை இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகளில் மேற்கொள்ளப்படும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களிலும் மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும் என வரைவு அறிக்கையில் தெரிவிடப்பட்டுள்ளது. இளநிலை படிப்புகளை 3-4 ஆண்டுகளிலும் முதுநிலையை இரண்டு அல்லது ஓராண்டில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.