சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலத்தில் அமைந்துள்ளது, முத்துமாரியம்மன் கோவில். இந்த கோவில் இந்து அறநிலை துறையின்கீழ் இயங்கி வருகிறது. இக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப ஆடு, கோழி, அல்லது முடியை காணிக்கை கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ள நிலையில் இங்கு முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு எந்த ஒரு கட்டணமும் வாங்கக்கூடாது டோக்கன் எடுத்து முறையாக முடி காணிக்கை செலுத்த வேண்டும் என்று விதிமுறையை அறநிலைத்துறை விதித்துள்ளது. ஆனால் முடி காணிக்கை செலுத்த வரும் மக்களிடம் முடி எடுக்கும் ஊழியர்கள் ஒரு மொட்டைக்கு 100 ரூபாய் வீதம், பக்தர்களிடம் வசூல் செய்வதாக பக்தர்கள் இன்று மாலை சுமார் 5 மணி அளவில் புகார் தெரிவித்துள்ளனர். மேலும்
பணம் பறிக்கும் தொழிலாளர்கள் மீது இந்து அறநிலைத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.