ராணிப்பேட்டை: சுரேஷ் (48) என்பவரின் மனைவி அமராவதி (32) இரவு நேரத்தில் அதிக நேரம் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் (டிச. 23) மீண்டும் செல்போனில் பேசியதால் அவரை சுரேஷ் திட்டினார். பின்னர் நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த சுரேஷ் மீது கொதிக்கும் வெந்நீரை அமராவதி ஊற்ற அவர் வலியால் துடித்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.