பிரான்ஸ்: பாரீஸில் உள்ள ஈபிள் டவர் பகுதியில் கிறிஸ்துமஸை முன்னிட்டு நேற்று (டிச. 24) ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அப்போது டவரில் உள்ள லிப்ட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். தீவிபத்து காரணமாக ஈபிள் டவர் பகுதியில் குவிந்திருந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.