கலை விழாவுக்கு அழைத்து சென்று மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர்

53பார்த்தது
கலை விழாவுக்கு அழைத்து சென்று மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர்
விருதுநகரை சேர்ந்த 17 வயது மாணவி, அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற இவர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வானார். அடுத்தக்கட்ட போட்டி அண்மையில் நடைபெற்ற நிலையில் அதில் மாணவி தோல்வியுற்றார். அவருக்கு ஆறுதல் கூறுவது போல உடனிருந்த ஆசிரியர் ராஜாமணி பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் ராஜாமணியை போக்சோவில் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி