தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்

81பார்த்தது
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (டிச., 25) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை சாந்தோம், பெசன்ட்நகர், நுங்கம்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். புத்தாடைகள் அணிந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு, இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அதே போல், கன்னியாகுமரி, நெல்லை, வேளாங்கண்ணி, கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கிறிஸ்துமஸ் களைகட்டியுள்ளது. 

நன்றி: சன் செய்தி

தொடர்புடைய செய்தி