பிரிட்டிஷ் திரையுலக கலைஞரான சார்லி சாப்ளின் நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பன்முகத்திறமைகளுடன் வாழ்ந்தவர். வசனங்கள் கொண்ட படங்களை தாண்டி மொழியற்ற மௌன படங்கள் மூலம் உலக மக்களையும் தன் பக்கம் திருப்பியவர். தனது அபார நகைச்சுவை திறமையால் உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளினின் 47ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (டிச. 25) அனுசரிக்கப்படுகிறது.