கொட்டும் மழையில் நடந்த சுவாமி அம்பு விடும் நிகழ்ச்சி

66பார்த்தது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நவராத்திரி விழா இறுதி நாளான விஜயதசமி முன்னிட்டு மகர் நோன்பு திடலில் ஆண்டுதோறும் சாமி அம்பு விடுதல் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும் இதனைத் தொடர்ந்து இன்று விஜயதசமி விழாவை முன்னிட்டு இன்று செஞ்சை பெருமாள் கோயில் ரங்கநாத பெருமான் காரைக்குடி கொப்புடைய நாயகி கோவில் கொப்புடைய அம்மன், கோவிலூர் கொற்றாலீஸ்வரர், நகரசிவன் கோயில் சுந்தரேஸ்வரர் என அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மேளதாளம் முழங்க திருவிதி உலா வருகை தந்து வானவேடிக்கையுடன் அம்பு விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்பு விடும் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை தொடர்ந்து பெய்து வந்த மழையை பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் குடையுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் எழுந்தருளிய தெய்வங்கள் மூன்று முறை வலம் வந்து அம்பு விடும் நிகழ்ச்சி கொட்டும் மழையில் நடைபெற்றது. காரைக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி