ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் சிறப்பு ரத்ததான முகாம்

58பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் ரத்ததான கழகம் என். எஸ். எஸ். , என். சி. சி. , ஒய். ஆர். சி. மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி, மாவட்ட ரத்த வங்கி மற்றும் திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம இணைந்து ரத்ததான சிறப்பு முகாம் நடத்தினர் முகாமை கல்லூரி பொறுப்பு முதல்வர் பரமசிவன் தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சித்துஹரி மற்றும் மருத்துவர் அரவிந்த் குமார் முன்னிலை வகித்தார். இதில் மாணவ மாணவிகள் 52 பேர் ஆர்வத்துடன் குருதி கொடையை வழங்கினர். இந்த முகாமை கல்லூரி ரத்ததான வங்கி ஒருங்கிணைப்பாளர் முனைவர் செந்தில்குமார் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மூர்த்தி, நாகபர்வதம், முனைவர் மோகன், முனைவர் அழகேசன், தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் முனைவர் லெப்டினென்ட் மாரி, இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் நாகராஜ், திருவேகம்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவ ஆலோசகர் முருகன், சிவகங்கை மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி ஆலோசகர் சூசைராஜா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இரத்ததானம் வழங்கிய மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி