35 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளதாகஆட்சியர்தகவல்

80பார்த்தது
சிவகங்கை மாவட்டத்தில், 2022-23 மற்றும் 2023 -24 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதாத, தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் உயர்கல்வியில் இதுவரை சேராத மாணவர்களும் இடைநிற்றல் இன்றி 100 சதவீதம் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் ஆகியவைகளின் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கடந்த 13. 09. 2024 அன்று சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக கூட்டரங்கில் நடைபெற்ற முதல் கட்ட முகாமின் மூலம் 32 மாணாக்கர்கள் சேர்க்கப்பட்டனர். இரண்டாம் கட்டமாக சிங்கம்புணரியில் நேற்றைய தினம் நடைபெற்ற முகாமில் சிங்கம்புணரி, திருப்பத்தூர், எஸ். புதூர் ஒன்றியங்களைச் சார்ந்த 12 ஆம் வகுப்பு முடித்து உயர் கல்வியில் சேராத 90 மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். அதில், 56 மாணவர்கள் உயர் கல்வி பயில விருப்பம் தெரிவித்தனர். அதில், 15 மாணவர்களுக்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 20 மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி நிறுவனங்களிலும் என மொத்தம் 35 மாணவர்களுக்கு உடனடி சேர்க்கையும் அம்முகாமின் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி