சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜா, நீண்ட காலமாக திமுகவில் பணியாற்றியவர்களுக்கு தலைமை பொறுப்பு கிடையாது, கருணாநிதி குடும்பத்திற்கு மட்டுமே என பிரகடனப்படுத்தும்
விஷயம் தான் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி என்றவர்,
செந்தில் பாலாஜியை துரோகி என்று சொன்ன ஸ்டாலினே இன்று அவரை தியாகி என்று சொல்கிறார்.
ஊழலின் ஒட்டு மொத்த உருவம் செந்தில் பாலாஜி எனவும், திமுக ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜி சிறை செல்வது உறுதி எனவும்ஸ்டாலினே கூறியிருந்தார். அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக் கொண்டதை ஒப்புக்கொண்ட செந்தில் பாலாஜி நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுவது நிச்சயம் என்ற H. ராஜா. பாஜகவிற்கு "B" டீ மாக திமுகவும் தேவையில்லை, அதிமுகவும் தேவையில்லைநாங்கள் ஒரே டீம்தான் என்றவர், தமிழகத்தில் என்கவுண்டர் மற்றும், போலீஸ் காவலில் கைதிகள் இறப்பதும் அதிகரித்து உள்ளதாக எச் ராஜா தெரிவித்தார்.