சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராமேஸ்வரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உதயாச்சி மேம்பாலத்தில் சென்னையில் இருந்து எஸ். பி பட்டணத்திற்கு செய்யது அலி (45)அவரது மனைவி பாத்திமா (38) மகள் அமிகா பானு (14) மகன் முகமது அம்ரின் (22) ஆகியோர் குடும்பத்துடன் சென்றனர். காரை முகமது அம்ரின் காரை ஓட்டி சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓர தடுப்புகளை உடைத்துக் கொண்டு 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்த மக்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் தப்பினர். விபத்து குறித்து தேவகோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.