சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் அதிமுக முன்னாள் நிர்வாகியின், நினைவாக இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சிங்கம்புணரி-திருப்பத்தூர் சாலையில் பெரியமாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 16 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 38 ஜோடிகள் என சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 54 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. பெரிய மாட்டுக்கு 9 கிலோமீட்டர் தொலைவும், சிறிய மாட்டுக்கு 5 கிலோமீட்டர் தொலைவும் எல்லைகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. சீறி பாய்ந்து சென்ற மாட்டுவண்டி போட்டிகளை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தி கண்டுகளித்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் எல்கையில் கொடியை வாங்கி வெற்றி பெற்ற முதல் 5 மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும், வெற்றி கோப்பை, ரொக்கம், உள்ளிட்ட பரிசுகளை வழங்கினர்..