ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வுக்கான நவம்பர் 5 மற்றும் 18, 2024 க்கு இடையில் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை இந்த தேர்வுக்கு பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் இன்று (ஜன.10) அனுமதித்துள்ளது. மேலும், “2024 அல்லது 2025-ல் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிப் பெறுபவர்கள் மட்டுமே இந்த தேர்வுக்கு தகுதி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதனால், சில மாணவர்கள் தேர்வு எழுதத் தகுதியுடையவர்கள் என நம்பி தமது படிப்பை கைவிட்டனர். எனவே இதில் பாரபட்சம் காட்ட முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.