கேரள மாநிலம் மலப்புரத்தில் நேற்று முன்தினம் (ஜன.8) மசூதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அப்போது திருவிழாவிற்காக யானை ஒன்று அழைத்து வரப்பட்டது. ஊர்வலமாக சென்று கொண்டிருந்த யானைக்கு திடீரென மதம் பிடித்தது. யானைக்கு மதம் பிடித்ததும் அருகிலிருந்த பொது மக்களை தாக்க தொடங்கியது. இதில் எழூரைச் சேர்ந்த கிருஷ்ணகுட்டி என்பவரை யானை தனது தும்பி கையால் தூக்கி வீசியது. இதனால் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று (ஜன.10) உயிரிழந்தார்.