மகா கும்பமேளா தொடங்கவுள்ளதையொட்டி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘அம்மாவின் சமையலறை’ உணவகத்தை தொடங்கி வைத்தார். நந்தி சேவா சன்ஸ்தான் என்கிற NGOஆல் நடத்தப்படும் இந்த உணவகத்தில் ரூ.9-க்கு 4 ரொட்டி, பருப்பு, சோறு, இனிப்பு உள்பட ஃபுல் மீல்ஸ் வழங்கப்படுகிறது. 2000 சதுர அடியில் அமைந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 150 பேர் அமர்ந்து சாப்பிடலாமாம். ஏழை மக்கள் இதனால் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது.