தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

72பார்த்தது
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை
தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் கேரள கடலோர பகுதிகளுக்கு அருகே தென்கிழக்கு அரபிக்கடலில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி