மகாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவை என்சிபி(எஸ்பி) தலைவர் சரத் பவார் சந்தித்தார். மகாராஷ்டிராவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தியா கூட்டணியில் இருக்கும் சரத்பவார், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் ஏக்நாத் சின்டேவை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பு குறித்த முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை.