பொளந்து கட்டிய வெயில்.. மதுரையில் 104 டிகிரி பதிவு

50பார்த்தது
பொளந்து கட்டிய வெயில்.. மதுரையில் 104 டிகிரி பதிவு
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் (மார்ச் 29) தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. அதில் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. சேலம் - 103.64, வேலூர் - 103.46, ஈரோடு - 103.28, சென்னை மீனம்பாக்கம் - 102.56 டிகிரி, தருமபுரி - 102.2 டிகிரி, கரூர் - 102.2 டிகிரி, திருச்சி - 102.02 டிகிரி, திருத்தணி - 100.4 டிகிரி, கோயம்புத்தூர் - 100.4 டிகிரி பதிவாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி