ஆந்திரா: சுக்குநூறாக நொறுங்கிய கார் - 3 பேர் பலி

72பார்த்தது
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் இன்று (டிச.24) அதிகாலை பயங்கர சாலை விபத்து நடந்தது. வேகமாக வந்த கார் மின்கம்பத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் கதிரிசெட்டி சோமேஸ்வர ராவ் (48), எம்.லாவண்யா (43), சினேகா குப்தா (18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். ஒடிசாவில் உள்ள ஜாஜ்பூர் அம்மனை தரிசனம் செய்ய சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி