அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் (78) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பில் கிளிண்டன் வாஷிங்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் பிரபல மெட்ஸ்டார் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிண்டன் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவரது பணியாளர்களின் துணைத் தலைவர் ஏஞ்சல் யுரேனா கூறியுள்ளார்.