போலீசார் சம்மன் வழங்கியதை அடுத்து நடிகர் அல்லு அர்ஜுன் இன்று விசாரணைக்காக ஐதராபாத், சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் பல கேள்விகளை கேட்டுள்ளனர். * சந்தியா தியேட்டர் வருவதை யாரிடம் சொன்னீர்கள்? * ரோடு ஷோவுக்கு அனுமதி வாங்கினீர்களா? * உங்கள் குடும்பத்தில் யார் எல்லாம் தியேட்டருக்கு வந்தார்கள்? * பெண் உயிரிழந்தது தியேட்டரில் இருக்கும் போது உங்களுக்கு தெரியாதா? பெண் இறந்தது எப்போது உங்களுக்குத் தெரியும்? என்பது போன்ற பல கேள்விகளை கேட்டுள்ளனர்.