ரயில் வருவதை பார்க்காமல் தண்டவாளத்தை கடக்க நினைத்த ஒருவர், திடீரென தனது அருகே ரயில் வருவதை பார்த்து நொடிப்பொழுத்தில் தண்டவாளத்தில் அப்படியே படுத்து, உயிர்தப்பிய வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ டிசம்பர் 22ஆம் தேதி மாலை கேரளாவின் சிராக்கல் - கண்ணூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பன்னென்பாறை பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. விசாரணையில் பவித்ரன் என்ற நபர் செல்போன் பேசிக்கொண்டு தண்டவாளத்தில் நடந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.