திமுக அரசு குறித்த பேச்சை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திரும்பப் பெற்றார். ‘நாகரீகமற்றவர்கள்’ எனப் பேசியதை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மக்களவையில், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். முன்னதாக, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுக்கப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஒன்றிய அமைச்சர், “தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது. அவர்கள் நாகரீகமற்றவர்கள்” என்ற கருத்தை தெரிவித்திருந்தார்.