385 கிராம ஊராட்சிகளிலும் உணவுத் திருவிழா போட்டி

69பார்த்தது
385 கிராம ஊராட்சிகளிலும் உணவுத் திருவிழா போட்டி
மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின்படி கிராமபுறங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் ஆகியோர் போதிய ஊட்டச்சத்து மற்றும் விழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே உணவு, ஊட்டச்சத்து, உடல் நலம், தன்சுத்தம், மற்றும் சுகாதாரம் பேணுதல் திட்டத்தின் மூலம் இரத்த சோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற உள்ளது.

சேலம் மாவட்டத்தில் 385 கிராம ஊராட்சிகளில் 09. 09. 2024 முதல் 12. 09. 2024 வரை கிராம பொது சேவை மையக்கட்டடங்களிலும், 20 வட்டார அளவில் 16. 09. 2024 முதல் 20. 09. 2024 வரை வட்டார பொது சேவை மையக் கட்டடங்களிலும், மாவட்ட அளவில் 25. 09. 2024 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் என 3 நிலைகளில் நடத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட தேதிகளில் நுண்ணூட்டச்சத்து குறைபாடு, இரத்தசோகையினால் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான பெண்கள், குழந்தைகள் வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்கள் பாதிக்கப்படுவதை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம்
மற்றும் பாரம்பரிய உணவுத்திருவிழா போட்டி நடைபெறும். இவ்வாறு மாவட்ட
ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி. இ. ஆ. ப. , அவர்கள் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி