சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள கணவாய் காடு பகுதியை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 65). இவர் காந்திநகர் பகுதியில் உள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி நின்றார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் சகாதேவன் கீழே இறங்கி வர மறுத்தார்.
இதை தொடர்ந்து சூரமங்கலம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு முதியவர் சம்மதம் தெரிவித்து கீழே இறங்கினார். இது பற்றி அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நிலப்பிரச்சினை இருப்பதால் அந்த நிலத்தில் சிலர் ஆடுகளை மேய்த்ததால் ஏற்பட்ட தகராறில் பாதிக்கப்பட்டவர்கள் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் தெரிவித்தனர்.
இதனால் போலீசார் விசாரணைக்கு சகாதேவனை அழைத்ததால் அவர் செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று கீேழ வர மறுத்து போராட்டம் நடத்தியதாக தெரிவித்தார். சகாதேவன் தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் போலீசார் அவரை விசாரிக்கும்படி உதவி கலெக்டர் உத்தரவிட்டார்.