சங்ககிரி - Sankari

சங்ககிரி: 17 வயது சிறுமிக்கு திருமணம் 3 பேர் மீது வழக்கு

சங்ககிரி: 17 வயது சிறுமிக்கு திருமணம் 3 பேர் மீது வழக்கு

சேலம் மாவட்டம் சங்ககரியை சேர்ந்தவர் மதன்குமார் கூலி தொழிலாளி, இவர் 17 வயது சிறுமியை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரிந்து சிறுமியை கண்டித்துள்ளனர். இதனால் சிறுமி வீட்டை விட்டு வெளியேறினார்.  இதனையடுத்து மதன்குமாரின் பெற்றோர் கடந்த 11ஆம் தேதி சிறுமியை மதன்குமாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்து சங்ககிரி ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் அம்சவல்லி என்பவருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அவர் விசாரணை நடத்தியதில் குழந்தை திருமணம் செய்தது உறுதியானது.  இதுகுறித்து சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸில் அம்சவல்லி புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனி, எஸ்ஐ மல்லிகா ஆகியோர் சிறுமியை குழந்தை திருமணம் செய்த குற்றத்திற்காக மதன்குமார் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த அவரது பெற்றோர் இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా