சேலம் கிச்சிப்பாளையம் மெயின் ரோடு சிவா காபிபார் அருகில் சந்தோஷ் என்பவர் மரம் அறுக்கும் மில் மற்றும் பிளைவுட் தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை ஊழியர்கள் அனைவரும் மர ஆலையை மூடிவிட்டு சென்றுவிட்டனர். இந்த நிலையில் இரவு 11 மணி அளவில் மர ஆலையில் இருந்து கரும் புகை எழுந்துள்ளது. சிறிது நேரத்தில் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்க்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து நடத்திய விசாரணையில் மின் கசிவின் காரணமாக மர ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.