சேலத்தில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் வெகு விமரிசையாக இன்று கொண்டாடி மகிழ்ந்தனர். அதிகாலையில் எழுந்து எண்ணை தேய்த்து குளித்து புத்தாடைகளை அணிந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். இதனையடுத்து தெருக்களில் மத்தாப்பு, புஸ்வானம், Productions உள்ளிட்டவைகளை கொழுத்தி மகிழ்ந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை கொளுத்தி தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர்.