சேலத்தில் துணி வியாபாரியை தாக்கிய வாலிபர் கைது

81பார்த்தது
சேலத்தில் துணி வியாபாரியை தாக்கிய வாலிபர் கைது
சேலம் குகையை சேர்ந்தவர் அம்ஜத் பாஷா (வயது 34). இவர் புலிகுத்தி பகுதியில் சாலையோரம் துணிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று 2 பேர் கடைக்கு சென்று தகராறில் ஈடுபட்டு அம்ஜத் பாஷாவை தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் சேலம் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எருமாபாளையம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் மோகன்குமார் (24) என்பவரை கைது செய்தனர். தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி