புற்றுநோய் செல்களை கண்டறிந்து அவற்றை நோய் எதிர்ப்பு செல்கள் மூலம் அழிக்கும் முறை கார்டி செல் சிகிச்சை என்று அழைக்கப்படுகிறது. நான்-ஹாட்ஜ்கின் லிம்போமா எனப்படும் ஒரு வகை ரத்தப் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக இந்த முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 24 பேருக்கு நடத்தப்பட்ட 2-ம் கட்ட பரிசோதனையில் 83% முழு அல்லது பகுதி அளவு பலனளித்துள்ளது. இந்தியாவில் இந்த சிகிச்சைக்கு சுமார் ரூ.35 முதல் ரூ.50 லட்சம் வரை செலவாகும் என கூறப்படுகிறது.