'இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் திட்டம்' நாடு முழுவதும் மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். “இந்த திட்டம் மூலம் இதுவரை சாலை விபத்தில் சிக்கிய 3,23,000 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் திட்டத்தின் காப்புறுதி தொகை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது” என்றார்.