ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டபோது நடிகை ராஷ்மிகா மந்தனாவின் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளாமல் ரெஸ்ட் எடுத்து வரும் ராஷ்மிகா, இன்று (ஜன.22) நடைபெறும் சாவா படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக காயத்தையும் பொருட்படுத்தாமல் விமானத்தில் பயணித்து மும்பை சென்றுள்ளார். ராஷ்மிகா மந்தனாவை வீல் சேரில் விமான நிலையத்திற்குள் அழைத்து வந்தபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.