“இது தான் அந்த ராஜதந்திரமா?” - காங்கிரஸிற்கு அண்ணாமலை கேள்வி

68பார்த்தது
“இது தான் அந்த ராஜதந்திரமா?” - காங்கிரஸிற்கு அண்ணாமலை கேள்வி
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சமீபத்தில் அளித்த பேட்டியில், “கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் ராஜதந்திரம்” என்று கூறுயிருக்கிறார். இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது ராஜதந்திரம் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். கடந்த 30 ஆண்டுகளில், இலங்கை அரசால், பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதான் அந்த ராஜதந்திரமா?” என்றார்.

தொடர்புடைய செய்தி