தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி விருதுநகரில் நடந்தது. இதில் சேலம் அட்வென்சர் சூட்டிங் அகாடமி சார்பில் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் டி. தனஞ்செயன் முதல் பரிசு பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். எஸ். ஜெய்சூர்யா 2-வது பரிசு பெற்று வெள்ளிபதக்கம் பெற்றார். 10 வயதுக்கு உட்பட்ட பிரிவில் டி. வி. தர்ஷன் சரத் 3-வது பரிசு பெற்று வெண்கல பதக்கம் பெற்றனர். இந்த சாதனை மாணவர்களை தமிழ்நாடு ஏர்கன் அசோசியேஷன் செயலாளர் கேசவன், பொருளாளர் நந்தகுமார், சேலம் மாவட்ட துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சிபு தாமு மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் பாராட்டினர்.