திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அந்த வகையில், நெடுஞ்சாலை அருகே உள்ள அரசு டாஸ்மாக் கடையை சுற்றிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த நிலையில், ஆபத்தை உணராமல் முழங்கால் அளவில் உள்ள தண்ணீரில், மது பிரியர்கள் நடந்து சென்று, காத்திருந்து மது பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.