ஃபார்முலா 4 கார் பந்தயம் தேவையா? அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் காட்டம்

67பார்த்தது
ஃபார்முலா 4 கார் பந்தயம் தேவையா? அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் காட்டம்
சேலத்தில் அனைத்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த ஃபார்முலா 4 கார் பந்தயத்தால் சென்னையில் இரண்டு நாட்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நோயாளிகள் முதியவர்கள் சொல்லில் அடங்கா துயரத்திற்கு ஆளானார்கள். விளம்பர அரசின் விளம்பரத்திற்கு எல்லையே இல்லையா? என குற்றம்சாட்டினார்.

அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி சரியாக இல்லை . இன்றளவும் சாலை ஓரத்தில் மக்கள் படுத்து உறங்கும்நிலையில் கார் பந்தயம் தேவையா ? என்றும் கேள்வி எழுப்பினார். இந்த நிகழ்வு நடத்துவதற்காக 40 கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். பட்டியலின மக்களுக்கு தமிழகத்தில் அவ்வளவு பிரச்சினைகள் உள்ளது.

அரசு பள்ளிகளில் 20,000 காலி பணியிடங்கள் காலியாக உள்ளது. மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக உள்ளது. அடிப்படை பிரச்சனைகள் மக்களுக்கு அவ்வளவு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்து வருகிறது .பிரசவம் பார்ப்பதற்குகூட மகப்பேறு மருத்துவர் இல்லாத நிலை உள்ளது. பள்ளிகளில் குழந்தைகளுக்கு பார்முலா சொல்லித்தர ஆசிரியர்கள் இல்லாத நிலையில், இந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தியது அவசியமா? எனவும் ராஜேஸ்வரி பிரியா கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்தி