இன்று (செப். 08) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 18, 553 கனஅடியில் இருந்து 16, 794 கனஅடியாகக் குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 116. 12 அடியாகக் குறைந்துள்ள நிலையில், நீர் இருப்பு 87. 12 டி. எம். சி. யாகக் குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 19, 000 கனஅடி தண்ணீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது